Home நாடு பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் அபு பக்கார் சிக் கார் விபத்தில் பலி!

பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் அபு பக்கார் சிக் கார் விபத்தில் பலி!

678
0
SHARE
Ad

Datuk Abu Bakar Chik pasகோலா திரெங்கானு, ஜூன் 23 – பாஸ் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ அபு பக்கார் சிக் (63) இன்று அதிகாலை புக்கிட் பெசி அஜில் அருகே கிலோமீட்டர் 390 -ல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று ‘தி ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது காரை ஓட்டிய உதவியாளர் ஹஸ்மிஸி ஹசான், உலு திரெங்கானு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இன்று அதிகாலை 3.16 மணியளவில் ஹஸ்மிஸி ஓட்டிய கார், 6 பயணிகள் கொண்ட வேன் ஒன்றுடன் மோதியதில், தீப்பிடித்தது.

#TamilSchoolmychoice

முன்னாள் திரெங்கானு மாநில செயற்குழு உறுப்பினரான அபு பக்கார் சிக் (படம்), கடந்த வருடம் நடைபெற்ற பாஸ் கட்சி தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.