Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்காவில் 700 வீடுகள் சொந்தமாக வைத்திருக்கும் இன்போசிஸ் நிர்வாகி!

அமெரிக்காவில் 700 வீடுகள் சொந்தமாக வைத்திருக்கும் இன்போசிஸ் நிர்வாகி!

519
0
SHARE
Ad

shibulalபுதுடில்லி, ஜூன் 25 – ரியல் எஸ்டேட் தொழிலில் அதீத ஆர்வமுள்ளரான  இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபுலால் (படம்) அமெரிக்காவில் 700-க்கும் அதிகமான வீடுகள் சொந்தமாக வாங்கியிருப்பதுடன், அதில் முன்னணி நிறுவனங்களின் பணியாளர்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

மேலும் ஷிபுலால் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியா, அமெரிக்கா,ஜெர்மனி மற்றும் பல நாடுகளில் ஆடம்பர வீடுகள் மற்றும் உல்லாச விடுதிகளை வாங்கியுள்ளனர்.

இன்போசிஸ் நிர்வாக அதிகாரி ஷிபுலால் குடும்பத்திற்கு நிறுவனத்திலிருந்து 2.2 சதவீத பங்குகள் உள்ளன என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அண்மையில்,‘தி எக்னாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் ஷிபுலாலின் மேலாளர் கூறியிருப்பவதாவது:-

“அமெரிக்காவில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள சியாட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 700 -க்கும் அதிகமான வீடுகளை ஷிபுலால் வாங்கியுள்ளார். அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகையை வசூலிப்பதற்கென்று தனியார் நிறுவனமான இந்தியாவின் ஐ.ஐ.எம். நியமிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதன் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 600 கோடியாகும். தன்னுடைய மொத்த சொத்தில் பெரும் பகுதியை வீடுகள் வாங்குவதிலேயே முதலீடு செய்துள்ளார். அங்கு பெருமளவில் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், ஸ்டார்பக்ஸ், போயிங் உள்ளிட்ட நிறுவனங்களின் பணியாளர்களையே வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்” என்றும் ஷிபுலாலின் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் ஐரோப்பிய ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்ய ஷிபுலால் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், இந்தியாவில் பல உணவகங்களை நடத்தி வரும் ஷிபுலாலின் மகள் ஸ்ருதி, குடும்பத்தின் ரியல் எஸ்டேட் தொழிலைக் கவனித்து வருவதாகவும் ஷிபுலாலின் மேலாளர் தெரிவித்தார்.