பெய்ஜிங், ஜூன் 30 – நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து அண்டை நாடுகளிடையே நட்புணர்வையும், அரசதந்திர உறவுகளையும் மேம்படுத்துவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி விட்டு சென்ற பின்னர், தற்போது இந்திய துணை அதிபர் முகமட் ஹாமிட் அன்சாரி ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
இந்திய துணை அதிபருடன் இன்று சந்திப்பு நடத்திய சீன அதிபர் சீ ஜின்பிங்
தனது சீன வருகையின் ஒரு பகுதியாக இன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் சீ ஜின் பிங்குடன் இந்திய துணை அதிபர் அன்சாரி பேச்சு வார்த்தை நடத்தினார்.
அன்சாரியுடன், மோடி அமைச்சரவையில் புதிய இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீத்தாராமனும் வருகை தந்துள்ளார்.
சீன துணை அதிபர் லி யுவான்சாவ் – இந்திய துணை அதிபர் முன்னிலையில் அதிகாரிகள் கையெழுத்திடும் காட்சி.
படங்கள்: EPA