Home கலை உலகம் கமல் கோபம்.. மன்னிப்பு கேட்ட சந்தானம்!

கமல் கோபம்.. மன்னிப்பு கேட்ட சந்தானம்!

655
0
SHARE
Ad

KamalHassanசென்னை, ஜூலை 1 – “வாலிப ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத அதன் கதாநாயகன் சந்தானம் மீது, கமல் கோபம் கொண்டதால், அவருக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம்.

சமீபத்தில் சந்தானம் நடித்த “வாலிப ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல் வந்திருந்தார். சந்தானமே நேரில் வந்து அழைத்ததால் அவர் வந்திருந்தார்.

ஆனால் விழாவின் நாயகனான சந்தானமோ நிகழ்ச்சிக்கே வரவில்லை. லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்ததாகக் காரணம் கூறினாராம். இது கமலுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியில் சந்தானம் குறித்து ஒரு வார்த்தை பேசாத கமல், விழா முடிந்ததும் தன் கோபத்தை நேரடியாகவே தயாரிப்பாளரிடம் காட்டிவிட்டுச் சென்றாராம்.

‘சந்தானம் நேரில் வந்து கேட்டுக் கொண்டதால் நான் வந்தேன். அவரோ தன் படப்பிடிப்புதான் முக்கியம் என்று நின்றுவிட்டாரே’ என்றாராம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சந்தானம், உடனே கமலுக்கு ஹைதராபாதிலிருந்து செல்பேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன் நிலைமையைச் சொல்லி, மன்னிப்புக் கேட்ட பிறகே, கமல் கொஞ்சம் அமைதியானாராம்!