Home உலகம் இந்தியா மீது விரைவில் போர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்! 

இந்தியா மீது விரைவில் போர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்! 

708
0
SHARE
Ad

iraq.,பாக்தாத், ஜூலை 3 -இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகளைக் காப்பாற்ற, போர் தொடுக்க இருப்பதாக ஈராக்கில் கிளர்ச்சியை ஏற்படுத்தி வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

ரமலான் நோன்பினை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் விடுத்துள்ள செய்தியில், “இந்தியா, இந்தோனேசியா, எகிப்த், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.”

iraq“புனித ரமலான் மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்ட போதிலும், நமது உரிமைகளைக் காப்பாற்ற முஸ்லிம்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த நாடுகளில் முஸ்லிம்கள் தேவையின்றி சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், ஈராக்கில் ஆட்சியை பிடித்த பிறகு இந்த நாடுகள் மீது போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ் தயாராகி வருவதாக கூறி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.