கடந்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்களின் நிலைமை இப்போது மிகவும் மோசமாகியுள்ளது.
கொடூரமான பயங்கரவாதிகள், அந்த பெண்களை என்ன செய்ய உள்ளனர் என்பதும் தெரியாததால், பெரும் பீதி நிலவுகிறது. கடந்த மாதம் 7-ஆம் தேதி ஈராக் அரசுக்கு எதிராக கடும் சண்டையை துவக்கிய “அல்கொய்தா” ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10இல் திக்ரிக் நகரை கைப்பற்றினர்.
அந்நகர மருத்துவமனைகளில் பணியாற்றிய தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ்கள் 46 பேர் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
நேற்று, அந்த நர்ஸ்கள் தங்கியிருந்த மருத்துவமனைக்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் நர்ஸ்களை மிரட்டி கார்களில் ஏறுமாறு கத்தினர். இதனால் பயந்த அந்தப் பெண்கள் மருத்துவமனை கண்ணாடி கதவுகளை உடைத்து வெளியே செல்ல முயன்றனர்.
அதையடுத்து அந்தப் பெண்கள் பயங்கரவாதிகள் கொண்டு வந்திருந்த பேருந்துகளில் ஏறினர். பயங்கரவாதிகள் மொசூல் நகரை நோக்கி சென்றனர்.
அதுவரை தாங்கள் வைத்திருந்த கைபேசிகள் மூலம், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்ட இந்திய பெண்களிடம் இருந்து கைப்பேசிகள் பறிக்கப்பட்டன.
அதற்குப் பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அரசு படைகளுடன் நடைபெறும் சண்டையில் படுகாயமடைந்து, மொசூல் நகரில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளிக்க, இந்திய நர்ஸ்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.