பிரேசில், ஜூலை 6 – உலகக் கிண்ணத்திற்கான கால் இறுதிப் போட்டிகளில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரேசில்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தில் கதாநாயகனாக உருவெடுக்கப் போவது யார் என காற்பந்து இரசிகர்களிடையே எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.
பிரேசில் குழுவிடம் கொலம்பியா தோல்வி கண்டதால், 22வது வயதில் தனக்கு கிடைத்த புதிய காற்பந்து நட்சத்திர அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல், ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் கண்ணீருடன் வெளியேறினார்.
ரோட்ரிகுயசுக்கு ஆறுதல் கூறும் கொலம்பியா பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மேன்
இருந்தாலும், காற்பந்து அரங்கில்அனைவரின் கவனமும்,பார்வையும் ரோட்ரிகுயசின் மீதுதான் பதிந்திருந்தது.
பிரேசில் ஆட்டக்காரர்கள் கூட தங்களின் வெற்றியை ஒரு கணம் மறந்து ஆட்டம் முடிந்தவுடன் கண்ணீருடன் காட்சியளித்த ரோட்ரிகுயசுக்கு ஆறுதல் கூறிய அற்புதமான விளையாட்டு நட்புறவையும் அன்றைய தினம் அரங்கில் காண முடிந்தது.
கொலம்பியாவைத் தோற்கடித்த பிரேசில் விளையாட்டாளர்களே ரோட்ரிகுயசுக்கு ஆறுதல் கூறும் விளையாட்டு நட்புறவைக் காட்டும் காட்சி
காற்பந்து விளையாட்டாளர்கள் தந்தை ஸ்தானத்தில் வைத்துப் போற்றும் பிரேசில் நாட்டு பயிற்சியாளரான ஷோலாரியும் ரோட்ரிகுயசுக்கு ஆறுதல் கூறினார்.
கொலம்பியா நாட்டு பயிற்சியாளரும் ரோட்ரிகுயசுக்கு ஆறுதல் கூற அன்றைய தினம் ஆட்டத்தில் தோல்வியுற்று சோகத்துடன் கண்ணீருடன் வெளியேறினாலும் அனைவரின் கவனத்தையும் ரோட்ரிகுயஸ் ஈர்த்து விட்டார்.
ஆறுதல் கூறும் பிரேசில் பயிற்சியாளர் பிலிப் ஷோலாரி…
“இன்று கண்ணீருடன் வெளியேறுகின்றேன்! விஸ்வரூபம் எடுத்து மீண்டும் வருவேன்” – என்று கூறாமல் கூறுகின்றாரோ…ரோட்ரிகுயஸ்
படங்கள்:EPA