Home கலை உலகம் த்ரிஷா இனி மரத்தை சுத்தி வந்து ஆட மாட்டாராம்!

த்ரிஷா இனி மரத்தை சுத்தி வந்து ஆட மாட்டாராம்!

1092
0
SHARE
Ad

Gorgeous Trisha in Saree Photoshoot for NAC Jewellers Adசென்னை, ஜூலை 7 – த்ரிஷா இனி மரத்தை சுத்தி சுத்தி பாட்டுப் பாடி நடனம் ஆடும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாராம். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் தமிழ் தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்.

மேலும் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது கன்னட படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் த்ரிஷா தனது கதாபாத்திரங்கள் குறித்து நினைத்து பார்த்துள்ளார்.

trisha_latest_saree_stills05நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தான் நடித்துள்ள கதாபாத்திரங்களை நினத்துப் பார்த்தால் எதுவும் திறமையான கதாபாத்திரம் இல்லை என்று நினைக்கிறார் த்ரிஷா.

#TamilSchoolmychoice

த்ரிஷா இத்தனை ஆண்டுகளில் கதாநாயகர்களுடன் மரத்தை சுத்தி சுத்தி பாட்டு பாடி நடனம் ஆடும் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். போனது போகட்டும் இனியாவது பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்று த்ரிஷா முடிவு செய்துள்ளார்.

ravi-trishaநயன்தாராவும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா ஜெயம் ரவியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பூலோகம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் பெயர் சொல்லும்படி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.