Home இந்தியா கலைஞர் டிவி தெரியும் ஆனால் அதன் பங்குதாரர்கள் யார் என்று தெரியாது – ராசா சாட்சியம்!

கலைஞர் டிவி தெரியும் ஆனால் அதன் பங்குதாரர்கள் யார் என்று தெரியாது – ராசா சாட்சியம்!

615
0
SHARE
Ad

a_rajaபுதுடில்லி, ஜூலை 8 – 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசா இந்த வழக்கில் நேற்று சாட்சியம் அளித்தபோது அவர் கூறியதாவது,

‘’டாடா குழும நிறுவனப் பணி தொடர்பாக, அந்நிறுவனங்களின் முன்னாள் தரகர் நிரா ராடியாவும், டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடாவும், என்னை ஒரு முறை என் வீட்டில் சந்தித்தனர்.

இப்படி, நிரா ராடியாவை ஒரு முறையோ அல்லது இரு முறையோ, ரத்தன் டாடாவுடன் சந்தித்துள்ளேன். அதன்பின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலும், வனத்துறை அமைச்சகத்திலும் அவர் என்னை சில நிமிடங்கள் சந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நிரா ராடியாவுடன் நான் தொலைபேசியில் பேசினேனா என்பது எனக்கு நினைவில்லை. ராடியா என்னை அடிக்கடி சந்தித்திருந்தாலும் நான் அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு நேயர் என்ற முறையில் கலைஞர் ‘டிவி’யைப் பற்றி எனக்குத் தெரியும். அதன் பங்குதாரர்கள் குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது.’டிவி’யை யார் துவக்கினர் என்பதும், அதன் நிர்வாகி யார் என்பதும் எனக்குத் தெரியாது.

AndimuthuRaja_285982aதி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லியில் உள்ள என் வீட்டிற்கு கனிமொழி வந்துள்ளார். கலைஞர், ‘டிவி’ தொடர்பாக ராடியா மற்றும் கனிமொழி உடன் நான் தொலைபேசியில் எந்த விதமான உரையாடலும் மேற்கொள்ளவில்லை.

தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது பல நிறுவனங்களுக்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். அதனால், யுனிடெக் நிறுவனத்திற்கு நிர்வாக ரீதியாக அளிக்கப்பட்ட ஒப்புதல்களை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை’’ என்று சாட்சியம் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.ராசா.