Home கலை உலகம் ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும் – த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை!

ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும் – த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை!

643
0
SHARE
Ad

Trisha,சென்னை, ஜூலை 8 – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்காதது தனக்கு பெரும் மனக்குறையாக உள்ளது என நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் முன்னணி நடிகை த்ரிஷா. விழா சிறப்புரை ஆற்றிய அவரிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேள்வி கேட்க, அவற்றுக்கு த்ரிஷா பதில் கூறியுள்ளார்.

த்ரிஷாவிடன் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

#TamilSchoolmychoice

trisha-speechகேள்வி: த்ரிஷா, இந்த ஃபெட்னா விழாவுக்கு வந்திருப்பது பற்றிச் சொல்லுங்கள்.

பதில்: எனக்கு உண்மையலேயே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்த விழாவாக இது அமைந்ததுள்ளது. மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோரோடு நடித்துவிட்டீர்கள், இவருடன் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற குறை உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: ஆமாம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்னும் நடிக்காதது எனக்கு பெரிய மனக்குறையாக உள்ளது. அவர் ஒரு சாதனையாளர். உலக அளவில் ஒரு அடையாளம். விரைவில் அவருடன் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன்.

கேள்வி: ஒரு துறையில் உள்ளவர்கள் அந்தத் துறை சார்ந்தவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. அது நல்லதுதான். ஒரு மருத்துவரி தொழிலில் உள்ள பிரச்சனைகள் இன்னொரு மருத்துவருக்குத்தான் தெரியும். அதுபோலத்தான் நடிப்புத் துறையிலும்.

trisha latest cute photos (11)கேள்வி: அப்படியெனில், ஒரு நடிகரைத்தான் நீங்கள் திருமணம் செய்வீர்களா?

பதில்: நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒரு நடிகரையே திருமணம் செய்து கொள்வேன். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

கேள்வி: பல மொழிகளில் நடித்திருக்கிறீர்கள். தாய் மொழி தமிழில் நடிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. தமிழ் தாய் மொழி என்பதால் அதில் உள்ள சந்தோஷமே தனி. எந்த மொழிப் படத்தில் நடித்தாலும், அந்த பட படப்பிடிப்பு சென்னையில் இருந்தால் இரு மடங்கு சந்தோஷம் வரும். அதுவே தமிழ்ப் படமாக இருந்தால், இன்னும் கூடுதல் சந்தோஷம். தமிழில் நடிக்கிறபோது மிக வசதியாக உணர்கிறேன்.

கேள்வி: இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கிறீர்களே.. இந்த அழகின் ரகசியம் என்ன?

பதில்: நான் என்னை ரொம்ப நேசிக்கிறேன். நம்மை கச்சிதமாக வைத்துக் கொள்வதே ஒரு சந்தோஷம்தானே என த்ரிஷா கூறியுள்ளார்.