Home நாடு அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பு! கொசு வலை தான் சிறந்த தீர்வு!

அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பு! கொசு வலை தான் சிறந்த தீர்வு!

729
0
SHARE
Ad

m_dengue_400_272_100கோலாலம்பூர், ஜூலை 8 – மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கைப்படி, இவ்வருட ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரை, மொத்தம் 44,518 பேர் டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இதே காலக்கட்டத்தில் மொத்தம் 31,660 டிங்கி சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது.

ஆனால், இவ்வாண்டு  12,858  டிங்கி சம்பவங்கள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்பதை இப்புள்ளி விபரம் காட்டுகின்றது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பை கட்டுப்படுத்த கொசு வலை பொருத்துவதே சிறந்த வழியென மலாயாப் பல்கலைக் கழக வெப்ப மண்டல தொற்றுநோய் ஆராய்ச்சி கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சஸாலி அபு பக்கார் தெரிவித்தார்.

அவ்வாறு கொசு வலையை பொருத்துவதற்கு அரசாங்கம் பொது மக்களுக்கு ஊக்குவிப்புத் தொகை சலுகையாக வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டார்.

கொசு வலை பொருத்த அதிக செலவாகும். எனவே, ஊக்குவிப்புத் தொகைக் கொடுத்து மக்களின் சுமையைக் குறைக்கவே சஸாலி அவ்யோசனையைத் தெரிவித்தார்.

மேலும், கொசுக்களை கட்டுப்படுத்த புகையடிக்கும் முறை டிங்கி கொசு பிரச்சனையைத் தீர்க்க சிறந்த நிவாரணம் அல்ல. புகையடித்து முப்பது நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கொசுக்கள் வரத் தொடங்கிவிடும். ஆகவே, கொசு வலை பயன்படுத்துவது மூலம் வீட்டிற்குள் கொசு நுழைவதைத் தடுக்க முடியும் என சஸாலி தெரிவித்தார்.

டிங்கி கொசு ஆபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தாங்கள் குடியிருக்கும் பகுதியை தூய்மையான வைத்திருப்பது அவசியம். உபயோகிக்காத வாளி, டயர் மற்றும் சாக்கடைகளில் நீர் தேக்கம் போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, வருங்காலங்களில் டிங்கி சம்பவங்களை குறைக்க கொசுவலை முறை சிறந்த நிவாரணியாக திகழும் என்றும் கூறப்படுகின்றது.