Home உலகம் ஆப்கன், உக்ரைன் நிலவரம்: ஒபாமா நேட்டோ படை செயலாளருடன் ஆலோசனை!

ஆப்கன், உக்ரைன் நிலவரம்: ஒபாமா நேட்டோ படை செயலாளருடன் ஆலோசனை!

481
0
SHARE
Ad

obama,வாஷிங்டன்,  ஜூலை 10 – ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் நிலவரம் குறித்து நேட்டோ படைகளின் பொதுசெயலாளருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேட்டோ படைகளின் பொது செயலாளர் ஆண்டர்ஸ் போக் சந்தித்து பேசினார்.

ஒபாமா மற்றும் ஆண்டர்ஸ் சந்திப்பின் போது, உக்ரைன் விவாகரம் மூலமாக ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா சவாலாக விளங்குவது குறித்தும், ஆப்கானிஸ்தானில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

மேலும் 2014-க்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதையடுத்து, அங்கு மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் குறித்தும், ஆப்கானிஸ்தான் நாட்டுடன் பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசித்தனர்.

பின்னர் ஆண்டர்ஸ் போக் நிருபர்களிடம் கூறுகையில், “2014 செப்டம்பரில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டிற்கு முன்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கன் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் 2014-க்கு பிறகு அது கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்தார்.

2014-க்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நிறுத்தியுள்ள சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்களை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் ஒபாமா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.