Home உலகம் உலக நாடுகளை உளவு பார்க்கும் விவகாரம் – அமெரிக்காவிற்கு ஜெர்மனி கடும் எச்சரிக்கை!

உலக நாடுகளை உளவு பார்க்கும் விவகாரம் – அமெரிக்காவிற்கு ஜெர்மனி கடும் எச்சரிக்கை!

566
0
SHARE
Ad

american-flag-50-stars-4வாஷிங்டன், ஜூலை 12 – உலக நாடுகளை உளவு பார்க்கும் போக்கினை அமெரிக்கா கட்டாயம் கை விட வேண்டும் என ஜெர்மனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் முன்னணி நாடுகளை தனது உளவாளிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து உளவு பார்த்து வருகின்றது. அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களை சந்தர்ப்பவாத நோக்குடன் அமெரிக்கா கையாண்டு வருவது குறித்து முன்னணி நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனி அரசு, “உலக நாடுகளை வேவு பார்க்கும் மனநிலையை அமெரிக்கா கை விட வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை எங்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜெர்மனியில் அமெரிக்க முக்கிய உளவு அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி உளவு அமைப்பில் பணியாற்றி வரும் ஒருவரும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஒருவரும் முக்கிய ஆவணங்களை அமெரிக்காவிடம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ஜெர்மனி வணிக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு, “அமெரிக்கா ஜெர்மனியை உளவு பார்ப்பது தொடர்ந்து நீடிக்குமேயானால் அமெரிக்காவில் ஜெர்மனியின் முதலீடு உடனடியாக நிறுத்தப்படும்” என்று எச்சரித்துள்ளது.