ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 – கடந்த ஒரு மாத காலமாக உலகையே அதகளப் படுத்தி வரும் உலகக் கிண்ணம் இதுதான்.
32 உலக நாடுகளை ஒன்றுடன் ஒன்று – பிரேசில் நாட்டின் காற்பந்து அரங்கங்களில் மோதவிட்டு – உலகம் எங்கிலும் கோடிக்கணக்கான காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுப்பதற்குக் காரணமான உலகக் கிண்ணம் இதுதான்.
தங்கத்தால் ஆன உலகக் கிண்ணம் – இன்று நடைபெறும் அர்ஜெண்டினா-ஜெர்மனி நாடுகளுக்கிடையிலான இறுதி ஆட்டத்தின் போது, பரிசளிப்பு வைபவத்திற்காக ரியோ டி ஜெனிரோவில் உள்ள மராக்கானா காற்பந்து அரங்கிற்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த 2010 உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் நாட்டின் முன்னாள் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) கார்லஸ் புயோல் மற்றும் பிரேசிலிய மாடல் அழகி ஜிசல் புண்ட்சென் ஆகிய இருவரும் உலகக் கிண்ணத்தை இறுதி ஆட்டம் நடைபெறும் அரங்கிற்குள் கொண்டு வந்தனர்.
படங்கள்: EPA