Home கலை உலகம் நயன்தாராவை ஷாருக்கானும் கடத்துவாராம்!

நயன்தாராவை ஷாருக்கானும் கடத்துவாராம்!

619
0
SHARE
Ad

nayantara,சென்னை, ஜூலை 22 – விஜய் விருதுகள் விழாவில் ராஜா ராணி படத்திற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருதை வாங்க மேடைக்கு வந்தார்  நயன்தாரா.

அவரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி என்ற டிடியும், கோபிநாத்தும் உங்களை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது என்று அவரிடம் கேட்டனர். இதை கேட்ட நயன்தாரா வெட்கமாகிவிட்டது.

vijay_awards nayantaraநயன்தாராவை உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் அல்லவா என்று கோபிநாத் ரசிகர்களை பார்த்து கேட்க அவர்களும் ஆமாம் என்றனர். இதற்கு பதில் அளித்து நயந்தாரா கூறியதாவது, “எதை செய்தாலும் சிறப்பாகவும், முழு மனதுடனும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் தான் என்னை அனைவருக்கும் பிடிக்கிறது என்று நினைக்கிறேன்” என நயன்தாரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

nayantharaநயன்தாராவுக்கு உங்களை தான் பிடிக்குமாம் என்று டிடி ஷாருக்கானை பார்த்து கூற அவர் முகத்தில் பெருமிதம். ஷாருக்கான் கையை விமானத்தில் பறப்பது போன்று காட்ட, நீங்களும் நயன்தாராவை கடத்துவீர்களா என்று டிடி கேட்டதற்கு ஷாருக் ஆமாம் என்றார்.

முன்னதாக விஜய் சேதுபதியிடம் நீங்கள் யாரை கடத்த விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நயன்தாராவின் பெயரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.