Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் வர்த்தக மண்டலம் அமைக்க தென்கொரியா, ஜப்பான் முயற்சி!

இந்தியாவில் வர்த்தக மண்டலம் அமைக்க தென்கொரியா, ஜப்பான் முயற்சி!

532
0
SHARE
Ad

நியூ டெல்லி, ஜூலை 23 – தென் கொரியாவும், ஜப்பானும் இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில் வர்த்தகம் மண்டலம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வருகின்றன.

ஆசிய அளவில் வளர்ந்து வரும் நாடாகவே இந்தியா கருதப்பட்டாலும், அதன் ஜனநாயக அமைப்பும், பன்முகம் கொண்ட மக்கள் நாகரீகமும் உலக அளவில் பல வர்த்தக நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கின்றது. இதனால் இந்தியா உலக அளவில் பெரும் வர்த்தகச் சந்தையாக விளங்குகின்றது.

neemrana-rajasthan

#TamilSchoolmychoice

 

(ராஜஸ்தான் நீம்ரானாவில் அமைந்துள்ள  புகழ்வாய்ந்த கோட்டை)

இந்நிலையில் தென்கொரிய அரசு, இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கு சாதகமாக ஒரு பெரும் வர்த்தக மண்டலத்தை ஏற்படுத்த தயாராகி வருகின்றது. அதன் காரணமாக தலைநகரான புது டெல்லியில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் நீம்ரானா பகுதியில் தகுந்த இடத்திற்கான அனுமதியை கோரிவருகின்றது.

இதே போல் அந்த பகுதியில், ஜப்பானும் தனது இரண்டாவது வர்த்தக மண்டலத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றது. இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நகரங்களாக கருதப்படும் டெல்லி மற்றும் மும்பைக்கு இடையில் இந்த பகுதி அமைந்துள்ளதால், தற்போது நீம்ரானா பகுதியின் மதிப்பு நாளுக்குநாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

ஜப்பான் அரசுக்கு நீம்ரானா பகுதியில் ஏற்கனவே ஒரு வர்த்தக மண்டலம் இருந்தாலும், இரண்டாவதாக ஒன்றை அமைக்க பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த காரணமாக அந்த பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் இடங்களின் வர்த்தக மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.