ஆஸ்திரேலியா, ஜூலை 23 – ஆஸ்திரேலியா மெல்பார்ன் நகரில் நேற்று 2014 -ம் ஆண்டிற்கான எய்ட்ஸ் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமை குறித்து வீதிகளில் பேரணி நடத்தினர்.
அதே வேளையில், மலேசிய விமானம் எம்எச்17, கடந்த ஜூலை 17 – ம் தேதி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டதில் பலியான, எய்ட்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உறுப்பினர்களுக்கும் தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
(விமான பேரிடரில் பலியான சக உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி பதாகையுடன் பெண் ஒருவர் பேரணியில் நடந்து செல்கிறார்)
(கையில் மெழுகுவர்த்தியுடன் பிரார்த்தனை செய்யும் எய்ட்ஸ் மாநாட்டு உறுப்பினர்கள்)
(பலியான உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது)
(எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் குற்றமல்ல என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய உறுப்பினர்கள்)
(எம்எச்17 பேரிடர் தொடர்பில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக வாசகம் ஏந்திய பதாகையுடன் எய்ட்ஸ் மாநாட்டு உறுப்பினர் ஒருவர்)
படங்கள்: EPA