Home உலகம் அல்ஜீரிய விமானம் விபத்தா? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அல்ஜீரிய விமானம் விபத்தா? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

385
0
SHARE
Ad

A-map-showing-the-town-of-Kidal-where-its-believed-an-Air-Algerie-flight-come-downஅல்ஜியர்ஸ், ஜூலை 24 – அல்ஜீரிய விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டது மாலி என்ற இடமாகும். அந்த இடத்தில் தான் கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் தனது இராணுவ பயிற்சிகளை தொடங்கியது.

அதன் பின்னர், ஏர் அல்ஜெரி விமானங்கள் வடக்கு மாலி வழியாகப் பறப்பதை தவிர்த்து வந்தன என்று அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி செய்தியாளர் ஃபெய்கால் மெட்டாவுய் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மாலியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே ஏர் அல்ஜெரி விமான நிறுவனத்தின் தலைவர்களுக்கு தாக்குதல் எச்சரிக்கை கொடுத்திருந்ததாகவும் ஃபெய்கால் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice