Home கலை உலகம் பெங்களூரில் சன்னி லியோன் “டிகே…” ஆட்டம்!

பெங்களூரில் சன்னி லியோன் “டிகே…” ஆட்டம்!

781
0
SHARE
Ad

Sunny-Leone,,பெங்களூர், ஆகஸ்ட் 1 – “டிகே…” அதாவது இது ஒரு கன்னடப் படத்தின் தலைப்பு. இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. அதில் பங்கேற்று ஆடிச் சிறப்பிக்கவுள்ளார் சன்னி லியோன்.

இதற்காக அவர் இந்த வாரக் கடைசியில் பெங்களூருக்குப் பறந்து போகிறாராம். இயக்குநர் -நடிகர் ஜோகி பிரேம்தான் இந்தப் படத்தை இயக்குபவர். அவரும், சன்னியும் சேர்ந்துதான் ஆடப் போகிறார்களாம் இந்தக் குத்துப்பாட்டுக்கு.

sunny-leoneஜோகி பிரேம் யாருன்னு சொல்லவே இல்லையே. தமிழில் சிம்புவுடனும், விஜய்யுடனும் நடித்தவரான முன்னாள் நடிகை ரக்சிதாவின் கணவர்தான் இந்த ஜோகி பிரேம். இப்படத்தை தயாரிப்பவர் ரக்சிதாதான். அதாவது இது ஜோகி பிரேமின் குடும்பப் படமும் கூட.

#TamilSchoolmychoice

ஏற்கனவே பேபி டால், லைலா போன்ற குத்துப் பாடல்களுக்கு ஆட்டம் போட்டவர்தான் சன்னி லியோன். தமிழிலும் கூட வடகறியில் ஆட்டம் போட்டுள்ளார்.

Sunny-Leone,இப்போது கன்னடத்தில் குத்து பாட்டுக்கு ஆடப் போகிறார். அவரது வருகைக்காக பெங்களூரே காத்திருப்பதாக ஜோகி பிரேம் குதூகலமாக கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கிலும் கூட தலை காட்டியுள்ளார் சன்னி. மலையாளம் மட்டும்தான் பாக்கி. சீக்கிரம் அங்கும் தனது திறமையைக் காட்டுவார் என்று நம்பலாம்.

Sunny-Leone-சன்னியின் ஆட்டத்துக்காக பெங்களூர்ப் புறநகர்ப் பகுதி ஒன்றில் விசேஷமாக நடன மேடை போட்டுள்ளனராம். அங்குதான் ஆடப் போகிறார் சன்னி.