Home உலகம் நேட்டோவில் ரஷ்யா பற்றி மறுபரிசீலனை வேண்டும்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்!

நேட்டோவில் ரஷ்யா பற்றி மறுபரிசீலனை வேண்டும்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்!

585
0
SHARE
Ad

David-Cameron-621x414லண்டன், ஆகஸ்ட் 4 – நேட்டோவில் ரஷ்யா அங்கம் வகிப்பது பற்றி கூட்டணி நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் மிக நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் ரஷ்யாவின் உறவு பற்றி, நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்மியூசன் மற்றும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளின் தலைவர்களுக்கு டேவிட் கேமரூன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“வட ஆப்பிரிக்காவில் இருந்து தி சாஹெல் முதல் சிரியா, ஈராக் வரையிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் நிலையற்ற தன்மை நீடித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

david-cameronஇந்த ஆண்டில், உலகில் அடுத்து என்ன நிகழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நேட்டோ வரலாற்றில் மற்றொரு முக்கிய தருணத்தை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.”

“அதனால் நேட்டோ அமைப்பின் முப்படைகளின் பலத்தையும், அதிரடி நடவடிக்கைகளை முயற்சிக்கும் படையின் பலத்தையும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம்.

இது தொடர்பாக நேட்டோ உறுப்பு நாடுகள், பிரிட்டன் செளத்வேல்ஸின் நியூபோர்ட் நகரில் இன்னும் 6 வாரங்களில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் இதனை உறுதிபடுத்த வேண்டும்”

“ரஷ்யாவை நேட்டோ மட்டுமே தோழமை நாடாக பார்த்து வருகின்றது. ஆனால், ரஷ்யா நேட்டோவிற்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.”

cameron3“சமீபத்திய ஆண்டுகளாக நிலவிய ஒத்துழைப்புகளுக்கு தற்போது சாத்தியமில்லை. ஏனெனில், நேட்டோவின் அண்டை நாடுகளுடன் ரஷ்யாவின் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, ரஷ்யாவுடனான நீண்டகால நட்புறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு இடையே மூன்றாம் உலகப்போர் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதையே டேவிட் கேமரூனின் கடிதம் சுட்டிக்காட்டுகின்றது.