Home கலை உலகம் போட்டி என்று வந்தால் கவர்ச்சியிலும் கிறங்கடிப்பேன் – ஹன்சிகா

போட்டி என்று வந்தால் கவர்ச்சியிலும் கிறங்கடிப்பேன் – ஹன்சிகா

533
0
SHARE
Ad

hansikaசென்னை, ஆகஸ்ட் 4 – தன்னை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் வெற்றி நாயகியாக இருந்தாலும், சமந்தாவுக்கு கோலிவுட்டில் இதுவரை எந்த படமும் கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தான் அவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் ஜோடி சேர்ந்தார். மேலும் விஜய், விக்ரமுடமுடனும் சேர்ந்து நடிக்கிறார். அஞ்சான் படத்தில் சமந்தா படுகவர்ச்சியாக நடித்துள்ளார்.

hansika_motwani_latest_cute_stills_2மேலும் டோலிவுட்டை போன்றே கோலிவுட்டிலும் முன்னனி நடிகையாக முடிவு செய்துள்ளாராம் சமந்தா. சமந்தாவின் இந்த முடிவால் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் என்னை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியாது என்று நம்பிக்கையோடு பேசுகிறார் ஹன்சிகா.

என் உடல் தோற்றத்திற்கு நான் எல்லாம் ஓரளவுக்கு சிறப்பான உடை அணிந்தாலே போதும், நான் கிளாமராக இருப்பேன் என்கிறார் ஹன்சிகா.

hansika6சமந்தாவின் கவர்ச்சியால் எனக்கு பயம் இல்லை. போட்டி என்று வந்தால் கவர்ச்சியிலும் கிறங்கடிப்பேன். நான் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும், அதே நேரம் கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று கூறினார் ஹன்சிகா.

என்ன தான் பல நடிகைகள் இருந்தாலும், சின்ன குஷ்பு போல் இருக்கும் ஹன்சிகாவுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.