Home உலகம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு சீனா அதிபர் விரைவில் சுற்றுப் பயணம்!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு சீனா அதிபர் விரைவில் சுற்றுப் பயணம்!

719
0
SHARE
Ad

china-xijinping2பெய்ஜிங், ஆகஸ்ட் 4 – சீனா அதிபர்  ஸி ஜின்பிங் விரைவில் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக பெய்ஜிங்கில் சீன அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “அதிபர்  ஸி ஜின்பிங் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது பயணம் இந்தியா மற்றும் இலங்கையை நோக்கியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் Chinesischer Vize-Staatspräsident Xi Jinping in Dresdenசேர்ந்த பத்திரிக்கைகளும் ஜின்பிங்கின் பயணத்தை உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படி,

#TamilSchoolmychoice

“சில பெரிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட, சீனா அதிபர் ஜீ ஜின்பிங், இந்த மாதத்தில் இஸ்லாமாபாத்திற்கு வருகை தர இருக்கிறார்” என்று அறிவித்துள்ளன. சீனா அதிபராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக  ஸி ஜின்பிங் இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.