Home நாடு காரணமின்றி பதவி விலக மாட்டேன் – காலிட் திட்டவட்டம்

காரணமின்றி பதவி விலக மாட்டேன் – காலிட் திட்டவட்டம்

493
0
SHARE
Ad

kalidh ibrahimபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 7 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து தான் காரணமின்றி விலக முடியாது என டான் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

“இப்பதவியில் நான் முறையான மாநில சட்டத்தின் கீழ் நியமிக்கபட்டேன். சிலாங்கூரில் பெரும் பான்மையான மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். எனவே காரணமில்லாமல் நான் பதவி விலக மாட்டேன்” என காலிட் கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரிய தலைவர் டத்தோ டாக்டர் டான்ஸ்ரீ க்வோங், டான் ஸ்ரீ காலிட் பதவி விலகாததற்கு காரணம் கோரும் கடிதம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு சிலங்கூர் மாநில அரசாங்க இணையதளத்தில் பதிலளித்த காலிட், “காஜாங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் ஏன் விலக வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் தெளிவாகக் கூறவில்லை. ஆகவே, என்னை பதவிலிருந்து நீக்கம் செய்வது நியாமற்றது” என்று தமது பதவி விலகலை நிராகரித்துள்ளார்.

“எந்த ஒரு சரியான காரணமில்லாமல் என்னை பதவி விலக சொல்வது மிக தவறு.இது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகக் கொள்கைக்கு விரோதமாக உள்ளது” என காலிட் தெரிவித்தார்.

மேலும், காலிட் வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையில், “காஜாங் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா முறையாக ஆராயாமல், என்னை மீறி வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்ட முடிவாகும். அனைத்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்த போது நான் மட்டும் அதற்கு எதிராக இருந்தேன் என்பது கட்சிக்கு தெரியும். எனினும், கட்சி எடுத்த அவசர முடிவெடுத்து தற்போது எனது பதவியை ராஜினாமா செய்யும் படி வற்புறுத்துகின்றது. அது அவ்வளவு எளிதல்ல” என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.

“இது போன்ற நடவடிக்கைகள் கட்சியின் மோசமான அரசியல் தந்திரத்தை பிரதிபலிக்கிறது.கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் முதல் என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பல சதி வேலைகள் நடந்து வந்தது எனக்கு தெரியும்” ” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.