Home நாடு ஒற்றுமையுடன் செயல்படுங்கள் – பக்காத்தான் உறுப்பினர்களுக்கு வான் அசிசா வேண்டுகோள்!

ஒற்றுமையுடன் செயல்படுங்கள் – பக்காத்தான் உறுப்பினர்களுக்கு வான் அசிசா வேண்டுகோள்!

546
0
SHARE
Ad

Wan Azizah Wan Ibrahimபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 – சிலாங்கூரில் தற்போது நடைபெற்று வரும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள பக்காத்தான் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சிலாங்கூரில் தற்போது நிலவி வரும் பிரச்சனை சரியான முறையில் விவாதிக்கப்படாமல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அனுகப்படுகிறது. கடந்த 2008 -ம் ஆண்டிலிருந்து பக்காத்தான் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகின்றது. அதனால் தான் கடந்த 13 -வது பொது தேர்தலில் 52 சதவிகித மக்களின் வாக்கை நம்மால் பெற முடிந்தது” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அசிசா கூறியுள்ளார்.

“மக்கள் ஒரு நேர்மையான, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியலை எதிர்பார்க்கின்றனர். ஆகையால் பக்காத்தான் உறுப்பினர்கள் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒன்றாக இணைந்து இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை காண வேண்டும்”என்றும் அசிசா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

காலிட் தனது மந்திரி பெசார் பதவியிலிருந்து விலக வேண்டும் என பிகேஆர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.மாநில சட்டமன்றத்தில் குறைவான இடங்கள் இருந்த போதிலும் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் பிகேஆர் கட்சிக்கு  முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

காலிட்டுக்குப் பதிலாக சிலாங்கூர் மந்திரி பெசாராக வான் அசிசா பதவி ஏற்க வேண்டும் என பிகேஆர் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.

ஆனால், பாஸ் பக்காத்தானின் கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும்,  மந்திரி பெசார் பதவியில் காலிட் நிலைத்திருக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.