கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – புகழ்பெற்ற துரித உணவகத் தொடரான மெக் டொனால்ட் நிறுவனம் இஸ்ரேலுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ள ஒரு சில தரப்பினர் நேற்று கோலாலம்பூர் ஜாலான் துன் பேராக்கிலுள்ள மெக் டொனால்ட் உணவகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இருப்பினும் தகவல் ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில், தாங்கள் இஸ்ரேலுக்கு எந்தவித நிதி உதவியும் அளிப்பதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தாங்கள் எந்த ஒரு அரசியல் சர்ச்சையிலும் தலையை நுழைப்பதில்லை என்றும், ஒரு நாட்டில் நடக்கும் அடக்குமுறையிலும், வன்முறைகளிலும் தாங்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்றும் மெக் டொனால்ட் நிறுவனம் தற்காத்துக் கூறியுள்ளது.
கோலாலம்பூரிலுள்ள மேக் டொனால்ட் உணவகம் ஒன்றின் முன்பாக காவல் காக்கும் ரேலா காவல் படை வீரர் ஒருவர் குளிர்பானம் அருந்தி ஓய்வெடுக்கும் காட்சி
பாலஸ்தீனக் கொடியேந்திய ஒருவர் கோலாலம்பூரிலுள்ள மேக் டொனால்ட் உணவகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி.
மேக் டொனால்ட் நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள். ‘யூதர்களின் பொருட்களை வாங்காதீர்கள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரத்தில், இஸ்ரேலுக்கு நிதி உதவிகள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படும் மற்ற சில நிறுவனங்களின் வணிக முத்திரை சின்னங்களும் இடம் பெற்றிருந்தன.
படங்கள் : EPA