கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – தனது ஆதரவாக உள்ளதால் சிலாங்கூர் மாநில மத்திய செயற்குழு உறுப்பினரான ரோட்ஸியா இஸ்மாயிலை பதவி நீக்கம் செய்யப்போவதில்லை என அம்மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான ரோட்ஸியா இஸ்மாயில் மலேசியா திரும்பியவுடன் அவருடன் இதுகுறித்து கலந்தாலோசிக்கப் போவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும் பட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்யப்போவதில்லை என்றும் காலிட் இன்று நடைபெற்ற சிலாங்கூர் மத்திய செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இதனிடையே, சிலாங்கூர் அரசாங்கம் பக்காத்தானின் அரசாங்கம் அல்ல என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர் டெங் சாங் கிம் நேற்று கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துரைத்த காலிட், பக்காத்தான் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று டெங் வெளியிட்ட அறிக்கையில், பக்காத்தான் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சுயேட்சை மந்திரி பெசாரான காலிட் இப்ராகிமுக்கு இல்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.