Home நாடு “நாடு திரும்பும் வரை காத்திருங்கள்” – காலிட்டின் கோரிக்கைக்கு சுல்தான் பதில்!

“நாடு திரும்பும் வரை காத்திருங்கள்” – காலிட்டின் கோரிக்கைக்கு சுல்தான் பதில்!

783
0
SHARE
Ad

Kalidhபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 18 – பாஸ் கட்சி தனக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்றோடு மீட்டுக் கொண்டதையடுத்து, சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், வெளிநாடு சென்றுள்ள சிலாங்கூர் சுல்தானை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ள சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை, அந்த நாட்டிற்கே சென்று சந்தித்து பேச காலிட் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் காலிட்டின் கோரிக்கையை சுல்தான் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து சுல்தானின் உதவியாளர் டத்தோ முகமட் முனீர் பானி இன்று வெளியிட்ட அறிக்கையில், “காலிட்டின் கோரிக்கையை சுல்தானிடம் தெரிவித்தேன். எனினும் இன்னும் சில தினங்களில் நாடு திரும்பியவுடன் காலிட்டை சந்திப்பதாக கூறினார்” என்று தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 27 -ம் தேதி சுல்தான் நாடு திரும்பியவுடன் சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.