Home நாடு பாஸ் முடிவை முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன் – காலிட்

பாஸ் முடிவை முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன் – காலிட்

546
0
SHARE
Ad

Kalidhகோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – இதுவரை சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்கு வழங்கி வந்த ஆதரவை பாஸ் கட்சி நேற்று மீட்டுக் கொண்டு, அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக வான் அசிசா அல்லது அஸ்மின் அலி ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

பாஸ் கட்சியின் இந்த முடிவை தான் முழு மனதோடு ஏற்றுக் கொள்வதாகவும், சிலாங்கூர் சுல்தானை சந்தித்து அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாகவும் காலிட் இப்ராகிம் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து காலிட் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாஸ் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த விவகாரத்தில் சுல்தான் ஒரு சுமூக முடிவு எடுக்கும் வரை, இங்கு நிலவும் அரசியல் நெருக்கடியால் சிலாங்கூர் மக்கள் துன்பப்படாமல் இருக்க பாஸ் கட்சியின் நான்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாநில நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ள சுல்தானை அங்கு சந்திக்க காலிட் விடுத்த கோரிக்கையை சுல்தான் மறுத்துள்ளார். தான் நாடு திரும்பும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.