Home நாடு இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் “இணையத்தில் தமிழ்” – முத்து நெடுமாறன், இளந்தமிழ் பங்கேற்பு

இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் “இணையத்தில் தமிழ்” – முத்து நெடுமாறன், இளந்தமிழ் பங்கேற்பு

712
0
SHARE
Ad

Bernama TV Helo Malaysia Muthu and Elanthamil 600 x 400கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – அஸ்ட்ரோ 502 அலை வரிசையில் ஒளிபரப்பாகும் பெர்னாமா தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சியாக இடம்பெற்று வரும் ‘ஹலோ மலேசியா’ கலந்துரையாடல்களில், இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு “இணையத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் இடம் பெறும்.

இந்த கலந்துரையாடலில், செல்லியல், செல்லினம் இணையத் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறனும், ‘உத்தமம்’ எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியக் கிளையின் தலைவரான இளந்தமிழும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள்.

www.bernama.com என்ற இணையத் தளத்தின் மூலமாக ஒளிபரப்பாகும் பெர்னாமா தொலைக்காட்சியின் இணைய வழி ஒளிபரப்பிலும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

#TamilSchoolmychoice

இரவு 10.00 மணி முதல் 11.00 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி மீண்டும் மறு ஒளிபரப்பாக, திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும் பின்னர், அதே நாளில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரையிலும் இடம் பெறும்.

இணையத்தில் தமிழ் மொழி ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும், புதிய பரிமாணங்களையும், எதிர்காலத்தில் தமிழ் மொழியின் வாயிலாக ஏற்படக் கூடிய தொழில் நுட்ப விளைவுகளையும் இந்த கலந்துரையாடலின் வழி வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.