சுமார் 8.41 மணியளவில் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு இராணுவ மரியாதையுடன் அவ்விரு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரு சடலங்களைத் தவிர மற்றொரு மலேசியரின் சடலமும் கொண்டு வரப்பட்டது. ஆனால் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அது யாருடையது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
எனினும், அந்த சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின், போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் மகளிர், குடும்பம் மற்றும் சமுயாத முன்னேற்றத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரொஹானி அப்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியர்களில் 20 பேரின் சடலங்கள் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, இராணுவ மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.