Home உலகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம்! 170 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம்! 170 பேர் படுகாயம்!

495
0
SHARE
Ad

california_27கலிபோர்னியா, ஆகஸ்ட் 25 – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் மேற்கு நாபா நகரின் தெற்கே 10 கி.மீட்டர் ஆழத்தில்   மையமாக கொண்டு  நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

andaman-nicobar-isஇது  ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.  இதனால் சான்பிரான்சிஸ்கோ மற்றும் அதை கூறியுள்ள பகுதிகள் குலுங்கின. அதை தொடர்ந்து அங்கிருந்த வீடுகள் இடிந்தன. வரலாறு சிறப்பு மிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.

earthquakeதகவலறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நிலநடுக்கத்தில் 170-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர் களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.