Home கலை உலகம் அனுஷ்கா காதலனுடன் ரகசிய சுற்றுலா!

அனுஷ்கா காதலனுடன் ரகசிய சுற்றுலா!

856
0
SHARE
Ad

Anushkaசென்னை, ஆகஸ்ட் 26 – ஒரு வருடம் இடைவிடாமல் படப்பிடிப்பில் பங்கேற்ற அனுஷ்கா, யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் சுற்றுலா புறப்பட்டு சென்றுள்ளார்.

ரஜினியுடன் ‘லிங்கா அஜீத்துடன் ‘தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, ஏற்கனவே தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி’, குணசேகர் இயக்கும் ‘ராணி ருத்ரம்மாதேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக இடைவிடாமல் படப்பிடிப்பில் பங்கேற்றதுடன் வாள் சண்டை, குதிரை ஏற்ற பயிற்சிகளும் பெற்றார். இது அவருக்கு படப்பிடிப்பில் பதற்றத்தை அதிகரித்தது.

#TamilSchoolmychoice

மேலும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததால் சென்னைக்கும் ஐதராபாத்துக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருந்தார். தற்போது தனது பணிகளை பெரும்பகுதி முடித்துவிட்டார். எனவே வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார் அனுஷ்கா.

anushka,இதையடுத்து குடும்பத்தினரிடம் மட்டும் தான் எங்கு செல்கிறேன் என்பதை தெரிவித்தார். மற்றவர்களிடம் சுற்றுலா செல்வதாக மட்டும் கூறிவிட்டு பறந்தார்.

அனிஷ்காவுடன் அவரது ரகசிய காதலனும் சென்றுள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் திரும்பி வந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க எண்ணியுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.