Home நாடு காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்கிறார்!

காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்கிறார்!

737
0
SHARE
Ad

Kalidhகோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமை மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகும் படி சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், புதிய மந்திரி பெசாரை நியமிக்கும் வரை தனது பொறுப்பை காலிட்டை செய்ய வேண்டும் என்றும் சுல்தான் கூறியுள்ளார்.

சுல்தானை இன்று மதியம் சந்தித்த பிறகு ஷா ஆலமில் உள்ள மாநில செயலவை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காலிட், இந்த அறிக்கையை வாசித்து காண்பித்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு இரண்டிற்கும் மேற்பட்ட பெயரை முன்மொழிய வேண்டும் என்றும் பக்காத்தான் தலைவர்களுக்கு சுல்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் காலிட் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, காலிட்டுக்குப் பதிலாக வான் அசிசாவை நியமனம் செய்ய பிகேஆர் மற்றும் ஜசெக ஒப்புதல் அளித்தது. ஆனால் முதலில் பிகேஆர் தலைவர் வான் அசிசாவிற்கு ஆதரவு தெரிவித்த பாஸ் கட்சி, நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டது.

இந்த விவகாரத்தில், சிலாங்கூர் சுல்தானை சந்தித்த பிறகு காலிட் சட்டமன்றத்தை கலைப்பாரா? மறு தேர்தல் நடத்தப்படுமா? என்ற பல கேள்விகளுக்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனால் சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது.