Home உலகம் பெண்களின் வெற்றியில் தான் அமெரிக்க வெற்றி உள்ளது – ஒபாமா!

பெண்களின் வெற்றியில் தான் அமெரிக்க வெற்றி உள்ளது – ஒபாமா!

562
0
SHARE
Ad

Barack Obamaவாஷிங்டன், ஆகஸ்ட் 27 – பெண்கள் எப்பொது வெற்றி பெறுகிறார்களோ, அப்பொதுதான் அமெரிக்கா வெற்றி பெறும் என பெண்கள் சமத்துவ நாள் அறிவிப்பில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

இரு பெண் குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்றைய தினத்தை அதாவது ஆகஸ்ட் 26-ஐ பெண்களின் சமத்துவ நாள் என அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று காலையில் வெளியிட்டார்.

அப்போது அவர் பெண்கள் சம வாய்ப்பினை பெற மறுக்கும் அனைத்து தடைகளையும் கிழித்தெறிய உறுதிமொழி எடுத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

#TamilSchoolmychoice

“அமெரிக்க நாட்டில் கடந்த 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ம் தேதி 19-வது சட்ட திருத்தத்தின்படி, அந்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓட்டளிப்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

பெண்கள் எப்பொழுது வெற்றி பெறுகிறார்களோ, அமெரிக்கா அப்பொழுது வெற்றி பெறும் என்பதை நாம் அறிவோம். பெண்களுக்கான வாய்ப்புகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றது.

இந்த 21-வது நூற்றாண்டில், ஒரு தாய் தனது மகளை முன்னேற்றி கொண்டு வர திறமை படைத்தவராக இருக்க வேண்டும். தனது கடின உழைப்பால் எந்த விசயத்தையும் தடைகள் இன்றி செய்து முடிக்க முடியும் என்பதை செய்து தனது மகளுக்கு ஒரு முன் மாதிரியாக அவர் இருக்க வேண்டும் என ஒபாமா கூறினார்.