புதுடெல்லி, ஆகஸ்ட் 29 – பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்கு நாளை புறப்படுகிறார். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்கனவே ஜப்பான் சென்றுள்ளார். தற்போது பிரதமராக பயணம் செல்லவுள்ளார்.
அவருக்கு ஜப்பானில் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் ஜப்பான் மக்களிடம் மோடி ஜப்பானிய மொழியில் உரையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக மொழி பெயர்ப்பு பயிற்சி எடுத்துள்ளார் மோடி.
இதற்கு ஜப்பான் நண்பர்களே உதவி செய்துள்ளனர்.ஜப்பான் பயணத்தை முன்னிட்டு, ஜப்பான் மக்களை கவரும் விதத்தில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஜப்பானிய மொழியில் மோடி கூறியிருப்பதாவது:
“ஜப்பான் பயணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கவுள்ளேன். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன். டோக்யோ, க்யோட்டா ஆகிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாட இருக்கிறேன்.
ஜப்பான் மக்களின் புதுமை மற்றும் நுட்பங்கள் போற்றுதலுக்குரியது. பல துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கவும், உறவுகள் மேம்படவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன் என்று மோடி ஜப்பானிய மொழியில் கூறியுள்ளார்.