Home நாடு அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம்

அமரர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளை மின்னியல் பதிவுகளாக்கும் திட்டம்

786
0
SHARE
Ad

Seeni Naina Mohdபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29 –  மறைந்த இறையருட் கவிஞர் அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் பங்களிப்பும், தமிழ் படைப்புகளும் என்றும் காலத்தால் நிலைத்திருக்கும் வண்ணம், அன்னாரின் தமிழ் படைப்புக்களையும், குறிப்பாக அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘உங்கள் குரல்’ பத்திரிக்கைப் பிரதிகளையும் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யவும், மின் நூலாக மாற்றவும், செல்லியல், செல்லினம் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் முன்வந்துள்ளார்.

இந்தத் திட்டம் ‘செல்லியல்’ தகவல் ஊடகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும்.

இந்த திட்டத்தில் செல்லியலுக்கு உறுதுணையாக செயல்பட  உத்தமம் மலேசியா சார்பில் திரு சி.ம.இளந்தமிழ் அவர்களும் இணைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தத் திட்டத்தின் இயக்குநரான முத்து நெடுமாறன், இதற்குரிய தொழில்நுட்ப வடிவமைப்பையும் அது தொடர்பான பணிகளைக் குறித்தும் நாளை நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளிப்பார்.  சி.ம.இளந்தமிழ்  இத்திட்டத்தின்  செயலாக்கம் குறித்து  விளக்கமளிப்பார்.

அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ் மொழி மீதான கருத்துகளும் படைப்புகளும் உலக அளவில் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும்,  அவரது படைப்புகளை எதிர்கால சந்ததியினரும் பாதுகாப்பாக வைத்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கீழ்க்காணுமாறு நடைபெறும்.

நாள்: சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014

நேரம்: காலை 11.00 மணி

இடம்: INFITT Malaysia Office: No 48A, 1st Floor, Jalan 1/19, PJ Old Town

Petaling Jaya, Selangor Darul Ehsan.