Home உலகம் சிரியாவில் 250 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்!

சிரியாவில் 250 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்!

496
0
SHARE
Ad

mideast-iraqலண்டன், ஆகஸ்ட் 30 – உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் அரசுப் படைகளை எதிர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் ஹமாஸ் மாகாணத்திலிருந்து வெளியே முயற்சி செய்தபோது சிரியா ராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 250 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சிரியா ராணுவத்தினரை படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொளிக் காட்சிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது டுவிட்டர் தளத்தில் சேர்த்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 100–க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளாடைகளுடன் துப்பாக்கி முனையில் இருப்பது காணிளிக் காட்சிகளில் பதிவாகி உள்ளது.

#TamilSchoolmychoice

siryaசிரியா கண்காணிப்பக நிலையத்தின் தகவலின்படி 346 தீவிரவாதிகளும் 170–க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய நாடுகளுக்கான அமைதி காக்கும் படையினர் 43 பேர் சிரியாவில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.