சிப்பாங், செப்டம்பர் 2 – எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களில் 7 பேரின் சடலங்களும், இரண்டு டச்சு நாட்டவர்களின் சடலங்களும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இன்று காலை 8.33 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
பூங்கா ராயா காம்பிளக்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறுகையில், இதுவரை 587 உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த உடல் பாகங்கள் அனைத்தையும் பரிசோதனைகள் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பவதற்காக 5 ஆவணங்கள் சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லியாவ் கூறியுள்ளார்.