Home கலை உலகம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெள்ளி விழா நிகழ்வின் காட்சிகள்!

‘ஆயிரத்தில் ஒருவன்’ வெள்ளி விழா நிகழ்வின் காட்சிகள்!

641
0
SHARE
Ad

சென்னை, செப்டம்பர் 3 – நவீன தொழில் நுட்பத்தில் வெளியாகி சென்னையில் வெள்ளி விழா கண்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக:-

Aayirathil-oruvan.jpg,

‘ஆயிரத்தில் ஒருவன்’ வெள்ளிவிழா நிகழ்வு நுழைவாயில் – புரட்சித் தலைவரின் படம் என்றாலே ஆண்டுகள் ஐம்பதைக் கடந்தாலும், அதே கூட்டம்…அதே மாலை மரியாதை….

#TamilSchoolmychoice

Aayirathil,oruvan,

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்களில் சிலர், நடிகர் ராஜ்கிரண், இயக்குநர் பி.வாசு, சத்யராஜ்,சரத்குமார், பி.சுசீலா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ராஜஸ்ரீ……

Aayirathil oruvan-.

அந்த நாளைய கவர்ச்சித் தாரகை ராஜஸ்ரீ குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றார். இவரும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். அருகில் (இடது) ராஜ்கிரண், (வலது) எம்.எஸ்.விசுவநாதன்…

Aayirathil oruvan-,

காலத்தால் அழியாத – மறக்க முடியாத பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரும் அவரது இசையில் பாடிய பி.சுசிலாவும் –  ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு விசுவநாதன் இசையமைக்க பி.சுசிலா பாடியிருந்தார்…

Aayirathil oruvan shathiya raj

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பாடிய பி.சுசிலாவுக்கு நினைவுப் பரிசு வழங்கும் சரத்குமார்…

aayirathiloruvan-.jpg,

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக்….