Home உலகம் உக்ரேன் அழிய வேண்டும் என்பதே புதினின் நோக்கம் – உக்ரைன் பிரதமர் குற்றச்சாட்டு! 

உக்ரேன் அழிய வேண்டும் என்பதே புதினின் நோக்கம் – உக்ரைன் பிரதமர் குற்றச்சாட்டு! 

633
0
SHARE
Ad

pudinகெய்வ், செப்டம்பர் 15 – ரஷ்ய அதிபர் புடினின் நோக்கம் போர் நிறுத்தம் அல்ல, உக்ரேனின் அழிவு தான் என உக்ரேன் பிரதமர் அர்செனிவ் யாட்சென்யுக் குற்றம்சாட்டி உள்ளார்.

ஐரோப்பாவுடன் நெருக்கம் காட்டி வந்த உக்ரேன் அரசு, பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தங்கள் நாட்டை இணைத்துக் கொள்ள முயன்று வந்தது.

இதனை உணர்ந்த ரஷ்யா,  கலவரங்களை ஏற்படுத்தி கிரிமியா பகுதியை தங்களுடன் இணைத்துக் கொண்டது. தற்போது கிழக்கு உக்ரேனில் போராளிக் குழுக்களைத் தூண்டி விட்டு உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உக்ரேன் பிரதமர் அர்செனிவ் யாட்சென்யுக் ரஷ்யாவுடனும், போராளிக் குழுக்களுடனும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

எனினும், ரஷ்யா மீண்டும் தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரேன் பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளதாவது:-

“ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், உக்ரைனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவதற்கு விரும்பவில்லை. மாறாக உக்ரேன் முழுவதையும் அழித்து அதனை கைப்பற்ற துடிக்கிறார்.

டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் நகரங்களை பிடிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உக்ரேனையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்”

“தனி சுதந்திர நாடாக இருக்கும் உக்ரேனை அழிக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்” “கிழக்கு உக்ரேனில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.