Home உலகம் தீவிரவாதத்தை எதிர்த்து அனைத்துலக சமூகம் ஒன்றுபடும் – ஐ.நா. செயலாளர் பான் கி மூன்

தீவிரவாதத்தை எதிர்த்து அனைத்துலக சமூகம் ஒன்றுபடும் – ஐ.நா. செயலாளர் பான் கி மூன்

563
0
SHARE
Ad

bankiநியூயார்க், செப்டம்பர் 18 – தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்துலக சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதத்தால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அனைத்துலக சமூகம் ஒன்றுபட்டு நிற்கும். அங்கு உள்நாட்டு பிரச்சனை மற்றும் அரசின் தோல்வியால் தீவிரவாத அமைப்புகள் சக்திவாய்ந்தவையாகி விட்டன.

நைஜீரியாவில் போக்கோ ஹாரம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல்கள் மட்டும் நடத்தவில்லை மாறாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து வருகின்றன.

#TamilSchoolmychoice

மாலி, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதை மறந்துவிட முடியாது. இது குறித்து மேலும் என்ன செய்யலாம் என்பது பற்றி அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் 69ந்வது உச்சி மாநாடு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.