நியூயார்க், செப்டம்பர் 19 – உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அமெரிக்காவில் உயிர் கொல்லியான எபோலா வைரஸை பரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய தேசமாக மாற்ற விரும்பும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளில் பெரும் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் உள் விவகாரங்களில் தலையிட்ட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பிணைக் கைதியாக இருந்த அந்நாடுகளின் பத்திரிக்கையாளர்களை தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது கடும் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், தரைவழித் தாங்குதலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது
இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் இணைய பக்கத்தில் அமெரிக்காவிற்கு எதிரான புதிய தாக்குதல் முறை ஒன்றை தெரிவித்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
பெப்சி அல்லது வேறு குளிப்பான கோப்பைகளில் எபோலா வைரஸை கலந்து அதை அமெரிக்க நீர் நிலைகளில் கலந்து விடுவது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அவர்களுக்கு எபோலா தாக்கியதும், மீண்டும் அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது போன்ற பல தாக்குதல் முறைகளை கையாள இருப்பதாக அந்த இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.