Home இந்தியா நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்க பயணம்!

நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்க பயணம்!

745
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, செப்டம்பர் 23 – பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். வரும் 26-ம் தேதி அன்று நியூயார்க் செல்லும் அவர் மறுநாள், கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் செப்டம்பர் 11, 2001 தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பின் ஐ.நா.சபையில் மோடி உரையாற்றுகிறார். அங்கு வங்கதேச பிரதமர் உட்பட, பல தலைவர்களை மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அன்றைய தினம் மாலையில் சென்ட்ரல் பார்க்கில் நடைபெறும் குளோபல் சிட்டிசன் விழாவில் கலந்து கொள்கிறார்.

28-ம் தேதி அன்று யூதர்கள் மற்றும் இந்திய – அமெரிக்கர்களிடம் உரையாற்றுகிறார். வாஷிங்டன்னுக்கு 29-ம் தேதி செல்லும் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா இரவு விருந்தளிக்கிறார். இது இருவரும் நேரில் சந்தித்து பேசும் முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பின்னர் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையான ‘பிளேயர் ஹவுஸில்  தங்குகிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாளிகையில் கடந்த 190 ஆண்டுகளாக, அமெரிக்க அதிபரின் விருந்தினராக வந்த பல முக்கிய தலைவர்கள் தங்கியுள்ளனர்.

இங்கு முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரும் தங்கியுள்ளார்.  30-ம் தேதி, மோடி-ஒபாமா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. அன்று மதியம், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் மோடிக்கு விருந்தளிக்கிறார்.

அதன்பின் கேபிடோல் ஹில் பகுதிக்கு செல்லும் மோடி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க -இந்திய வர்த்தக ஆணையக்குழு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் தொழிலதிபர்களை மோடி சந்தித்து பேசுகிறார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.