Home நாடு சிலாங்கூர்: புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்பு!

சிலாங்கூர்: புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்பு!

591
0
SHARE
Ad

Azmin Aliகிள்ளான், செப்டம்பர் 24 – சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றுள்ள நிலையில், புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மந்திரி பெசார் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குறித்து, அடுத்து வரும் இரு தினங்கள் ஆலோசிக்கப்படும் என்றார்.

“ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியலை வியாழக்கிழமை வெளியிடுவோம். பதவியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும்,” என்றார் அவர்.

#TamilSchoolmychoice

கடந்த முறை ஆட்சிக் குழு உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும்  வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுகுறித்து தாம் பக்காத்தானுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என்றார்.

பிகேஆர் தலைவர் வான் அசிசாவும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது.

“எங்களது ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே அனைத்தும் முடிவாகும்,” என்றார்
அஸ்மின் அலி.