ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஏர் பிரான்ஸ் நிறுவனம், பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், பெரும் வர்த்தக போட்டிகள் காரணமாகவும் தனது பல சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான டிரான்ஸ்வியாவிற்கு மாற்ற முடிவு செய்தது.
இதனை எதிர்த்து, அந்நிறுவன விமானிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தம் தொடங்கி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் யூரோக்கள் வீதம், பெரும் நஷ்டத்தை ஏர் பிரான்ஸ் நிறுவனம் சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டிரான்ஸ்வியா திட்டத்தை ஏர் பிரான்ஸ் கைவிடுவதாக நேற்று அறிவித்தது. எனினும் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை விமானிகள் அசட்டை செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
டிரான்ஸ்வியா திட்டத்தை கைவிடுவது ஏர்பிரான்ஸிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், விமான நிறுவனம் குறைந்த அளவிலான ஊதியத்தை பெரும் விமானிகளை வேலையில் வைத்துக் கொண்டு தங்களை மாற்றலாம் என்ற அச்சம் ஏர்பிரான்ஸ் விமானிகளிடத்திலும் எழுந்துள்ளது.