Home நாடு எம்எச்17 பேரிடர்: 20 மலேசியப் பயணிகளின் குடும்பத்திற்கு ‘சொக்சோ’ உதவித் தொகை!

எம்எச்17 பேரிடர்: 20 மலேசியப் பயணிகளின் குடும்பத்திற்கு ‘சொக்சோ’ உதவித் தொகை!

559
0
SHARE
Ad

mh17,கூச்சிங், செப்டம்பர் 29 – கடந்த ஜூலை மாதம் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் குடும்பத்தினருக்கு, சொக்சோ என்று அழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு திட்டம் (The Social Security Organisation – Socso), இறுதிச் சடங்குகளுக்கான செலவு மற்றும் முதல் மாத உதவித் தொகையை வழங்கியுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் இன்று தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணம் செய்த 15 விமானப் பணியாளர்கள் மற்றும் 5 பயணிகளின் குடும்பத்தினருக்கு இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாத உதவித்தொகை அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து 575 ரிங்கிட் முதல் 2,675 ரிங்கிட் வரை என்றும், இறுதிச் சடங்குகளுக்கான செலவாக 1,500 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது என்றும் ரிச்சர்ட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice