Home இந்தியா தமிழக புதிய அமைச்சரவையின் கண்ணீர்க் காட்சிகள்! (படங்களுடன்)

தமிழக புதிய அமைச்சரவையின் கண்ணீர்க் காட்சிகள்! (படங்களுடன்)

705
0
SHARE
Ad

சென்னை, செப்டம்பர் 30 – தமிழக அரசியலில் உச்சம் என்பது ஒருவர் அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பதுதான்.

ஆனால், அவ்வாறு நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், கண்ணீர் மல்க, சோகத்துடன் முதல்வராகப் பதவியேற்ற காட்சியையும், அவரைத் தொடர்ந்து பதவியேற்ற அனைத்து அமைச்சர்களும், கண்ணீர் சிந்தியவாறு பதவியேற்ற காட்சிகளையும், தமிழக மக்கள் கண்டார்கள்.

தங்கள் தலைவிக்கு நேர்ந்த இன்னலான சூழ்நிலைதான் அவர்களின் இந்த சோகச் சூழலுக்குக் காரணம்  என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

#TamilSchoolmychoice

நேற்று ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும், தங்களின் பழைய பொறுப்புக்களை மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து ஏற்றுக் கொண்டபோது, நிலவிய சோகக் காட்சிகளை இங்கே காணலாம்:

Minister Panneer Selvam

 பதவியேற்பு விழாவில் பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம்..

 Minister crying 2சோகத்துடன் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் அமைச்சர்கள்….

 Ministers crying மீண்டும் அதே பொறுப்புகளோடு அமைச்சர் பதவி என்றாலும், அதன் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்காத முகங்கள்…

Ministers crying

கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோகத்துடன் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள்…

Ministers crying

சோகத்தைத் தாங்காமல் அழுகையோடு அமைச்சர் ஒருவர் ….

Ministers crying

பதவியேற்க அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் சோக முகங்கள்…

Ministers Panneer Selvam sad on swearing in ceremony

முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னால் கவலை தோய்ந்த முகத்தோடு காத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம்…