Home நாடு 485 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின் உதயகுமார் இன்று விடுதலையானார்!

485 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின் உதயகுமார் இன்று விடுதலையானார்!

676
0
SHARE
Ad

Uthayakumarகோலாலம்பூர், அக்டோபர் 3 – காஜாங் சிறையில் இருந்து 485 நாட்களுக்குப் பிறகு இன்று விடுதலையான இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாருக்கு சிறைக்கு வெளியே சுமார் 60 இண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பளித்தனர்.

“பொதுமக்களுக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு போராட்டத்திற்கும் நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் எனக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை” என்று சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, உதயகுமாரின் மேல் முறையீட்டு மனுவை விசாரணை நீதிமன்றம் அவரது தண்டனையை 6 மாதங்களாகக் குறைத்தது.

அதனைத் தொடர்ந்து உதயகுமார் இன்று விடுதலையானார்.