Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸ் நிறுவனத்தை சீரமைக்க வெளிநாட்டு தலைமை நிர்வாக அதிகாரி! 

மாஸ் நிறுவனத்தை சீரமைக்க வெளிநாட்டு தலைமை நிர்வாக அதிகாரி! 

454
0
SHARE
Ad

MAS LOGOகோலாலம்பூர், அக்டோபர் 9 – மாஸ் நிறுவன வரலாற்றில் இதுவரை கண்டிராத புதிய மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கடும் நெருக்கடியில் இருக்கும் மாஸ் நிறுவனத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்த, முதல் முறையாக மலேசியர் அல்லாத வெளிநாட்டவர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த புதிய மாற்றம் தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத முக்கிய நபர்கள் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அயல்நாட்டவர் தேர்வு செய்ய இருப்பதற்கு, மாஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான கசானா நேசனல் சம்மதம் தெரிவித்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரிக்கான மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் இருந்து, ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என்று கூறியுள்ளனர்.

மேலும், மாஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி மட்டும் அல்லாது, தனித்தனி துறைகளுக்கான 6 முக்கிய அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதய தலைமை நிர்வாக அதிகாரியான அகமட் ஜுஹாரி யாஹ்யாவின் பதவிக் காலம், 2015-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளதால், அவரது பதவிக் காலம் முடிந்தவுடன் புதிய அதிகாரி பதவி ஏற்பார் என தெரிய வருகின்றது.