Home உலகம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ஐ.நா.வில் இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ஐ.நா.வில் இந்தியா அறிவிப்பு!

1089
0
SHARE
Ad

indiaஜெனிவா, அக்டோபர் 9 – காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இராணுவத்தினர் தொடர்ந்து ஒரு வாரகாலமாக சண்டையிட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்க இந்திய இராணுவம் முழு வீச்சில் தயாராக உள்ளது என ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் இராணுவக் கண்காணிப்புக்குழுவிடம் ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத் கான் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாதான் முதலில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தில் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தீர்வு காண வேண்டும். எல்லையில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா.விற்கான இந்தியப் பிரதிநிதி தேவேஷ் உத்தம் கூறியதாவது:- “போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இந்தியாவின் இராணுவ நிலைகள், எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.’

“இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பல அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே சுமுக உறவு ஏற்படுவது தடைப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் நிலைப்பாடே காரணம்.”

“இதுபோன்ற சூழலில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ராணுவமும், துணை ராணுவப் படைகளும் முழுவீச்சில் தயாராகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.